Manivannan Rethinam - Praying
Manivannan Rethinam

சர்வதேச கொடிய நோய் தொற்று பரவல் காலகட்டத்தில் வீன் விரயங்களை தவிர்த்து சிக்கனமாகவும் விவேகத்துடனும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவோம்

        தற்போது நாட்டை உயிர் கொல்லி நோயான கொரோனா கிருமி நோய் தொற்று பீடித்திருந்தாலும் இந்த சூழலோடு ஒன்றிணைந்து வாழப்பழகி கொண்டு வருகிறோம் . நோய் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அரசாங்கம் தீவிரமாக முனைப்பு காட்டி வருகிறது .நிர்ணயக்கபட்ட நடைமுறை கட்டுப்பாட்டுகளை முறையே பின்பற்றினால் இந்த பீடிப்பில் இருந்து வெகுவிரைவில் நாம் விடுபட வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது .நோய் பீடிப்பு  சங்கிலி தொடராமல் பாதுகாத்து விவேகமாக நிர்வகிக்க முடியும் .  

       இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில்  வேலைகளை இழந்து  வருமானங்களையும் இழந்து ,ஊதியம் பற்றாக்குறையானலும் ஆண்டுக்கு ஒருமுறை நாம் கொண்டாடிமகிழும் தீபாவளி திருநாள் வந்து விட்டது . இந்த பெருநாள் காலகட்டத்தில் நாம் நம் பொருளாதார இருப்பு மற்றும் குடும்ப சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு மிகவும் சிக்கனமாகவும் சிந்தித்து விவேகமாகவும் செலவுகளை குறைந்து தீபாவளியை கொண்டாட வேண்டும் .  

         தேவையற்ற விரயங்களையும் அனாவசிய செலவுகளையும் தவிர்த்து குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுடன் நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனை கட்டுப்பாட்டு ஆணையை மனதில் நிறுத்தி சிக்கனமாகவும் விவேகமாகவும் தீபாவளி திருநாளை கொண்டாட வேண்டும் என்று ,மஜிலிஸ் க்காசான் மலேசியாவின் தலைவர் ,மலேசிய சமூக நல மறுமலர்ச்சி இயக்கம் (அரிமா)வின் கூட்டரசு பிரதேசத்தின் மாநில தலைவர், மற்றும்  ஹார்வார்ட் வணிக பள்ளியின் முன்னால் மாணவர்கள் கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினருமான திரு.மணிவண்ணன் ரத்திணம் கூறினார் .மலேசிய வாழ் அனைத்து இந்திய வம்சாவழிகளுக்கும் தன் மனமார்ந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறினார் .

#askmani

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *