2021-ஆம் ஆண்டின் வரவு செலவு  கணக்கு அறிக்கையில்  பொருளாதார மீட்சி ,புதிய வேலைவாய்ப்பு மற்றும் கோவிட்-19 தொற்று நோய்யை விவேகமாக நிர்வகிக்கப்பட்ட வேண்டும் .

      தற்போதைய நம் நாட்டை சூழ்ந்துள்ள உயிர் கொள்ளி நோய்யான கொரோனா கிருமி  தொற்றை கட்டுபடுதுவதும் பொதுச்சுகாதாரத்தை பாதுகாப்பதும் மத்தியஅரசின் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்று , மலேசியர் இந்தியர் மறுமலர்ச்சி இயக்கம் (அரிமா)வின் கூட்டரசு பிரதேசத்தின் தலைவர் மற்றும்  மஜிலிஸ் ககாசான் மலேசியாவின்  தலைவருமான திரு.மணிவண்ணன் ரத்தினம் கூறினார்.வணிகருமான அவர்,ஹார்வர்ட் வணிகப் பள்ளியின் முன்னால் மாணவர்கள் கழகத்தின் ஆட்சிக்குழு உருப்பினருமாவார்,என்பது குறிப்பிட்ட தக்கது .

        நோய் பீடிப்பை செவ்வனே நிர்வகிப்பதும் நாட்டு மக்களின் உயிரை காப்பாற்றுவதும் முதல் நோக்கமாக இருக்க வேண்டும் .

         இந்த கோவிட்-19 தொற்றுநோய்  காரணமாக வேலைசெய்ய முடியாமல் ,வேலைகளை இழந்து  தங்களின் வருமானம் மற்றும் வாழ்வாதாரத்தை பறிகொடுத்த மக்களுக்கு மத்திய அரசு உதவுவதை இன்னமும் சில காலங்களுக்கு தொடரவேண்டும் .தனிநபர்கள்க்கான வருமான ஆதரவு ,முறையான பாதுகாப்பு உபகரணங்கள் ,பணியிட சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு முன் எச்சரிக்கைகளை தயார்படுத்திக் கொடுக்கவேண்டும் .தொழிலாளர்களுக்கு மறுபயிற்சியும் வழங்கப்பட வேண்டும். இதனால் பயிற்சி மற்றும் பயிற்சிக்கான வாய்ப்புக்களை பெற வழி கிடைக்க செய்யப்படும் .நிர்ணயக்கபட்ட நடைமுறை கட்டுப்பாட்டையும் (எஸ்ஓபி) பின்பற்றவேண்டும்.

          பொருளாதார மந்தநிலை மற்றும் வேலையில்ல நெருக்கடிக்கு பதில் அளிக்கும் விதமாக நிதி கொள்கை நடவடிக்கைகள் வரும் 2021-ஆம் ஆண்டின் வரவு செலவு கணக்கு அறிக்கையில் இருந்தால் வரவேற்கத்தக்கது என்று அவர் கூறினார் .மலேசியர்களுக்கான அடிப்படை வேலை வாய்ப்புகளை திரும்ப பெருவதற்க்கு உதவ முன்னுரிமை அளிக்க வேண்டும் .பண நெருக்கடியையும் ஆபத்தான வேலைவாய்ப்புகளில் மிக குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்களையும்  இந்த சூழலில் பாதிக்கப்பட கூடிய  தொழிலாளர்களையும் குறிப்பாக பெண்கள் ,இளைஞர்கள், குறைபாடு மற்றும் மாற்றுத்திறனாளி தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் பெரிதாக பாதித்துள்ளது . ஆகவேதான் பொருளாதார மீட்புக்கான விவேக திட்டத்தை  ஆண் பெண் இருபாலருக்கும் உள்ளடக்கிய சமத்துவம் குறையாத வண்ணம் மற்றும் நிலையானதாக இருக்க வேண்டும் .

         இதனை பொருட்டு ! தொழிலாளர் சேமநிதி வாரிய வைப்பு தொகை(ஈபிஎஃப்) வைப்புத்தொகை கணக்கு 1-யில் இருந்து சேமிப்புத் தொகைகளை திரும்ப பெறுவதை  திரு.மணிவண்ணன் ரத்திணம் ,ஆதரிப்பதாக கூறினார்.

         மாதாமாதம் அட்டவணையிட்டு பணியாளர்களின் வருங்கால வைப்புத்தொகையில் இருந்து உதவி தொகை பெறுவது மிகவும் சிறந்த ஒரு ஆலோசனை என்று அவர் விளக்கம் அளித்தார் . குறிப்பாக திடீர் வேலையிழ்ப்பு ,வருமானம் இல்லாமல்  துயரத்தில் தவிக்கும் மக்களுக்கும் சொந்த தொழில் மற்றும் சிறு வணிகம் செய்து நாள்தோறும் வருமானம் ஈட்டியவர்களுக்கு பேருதவியாக இருக்கும் இந்த திட்டம் .அவர்களின் அத்தியாவசியமான தேவைகளுக்கும் இன்றியமையாத உணவு பொருட்களை வாங்கவும் அதிகமாக பயன்படும் .உதவிதேவைப்படும் போது  பயன் படாத சேமிப்பு தொகை  பின்னாளில் நிரந்தரம் அற்ற வாழ்க்கையில் ஓய்வு ஊதியமாக கிடைக்க யாருக்கு லாபம் கிடைக்க போகிறது .ஒரு வேலை உணவு உண்பதற்குக்கூட சிலபல பாதிக்கப்பட்ட மக்கள் அவதியுற்று வருகின்றனர் என்பது இங்கு எத்தனை பேர் அறிவோம் என்று திரு.மணிவண்ணன் ரத்திணம் கேள்வி எழுப்பினார் .இன்னமும் பல குடும்பங்கள் பசி பட்டினியால் வாடிகொண்டுதான் இருக்கின்றனர் .

       அதிகபட்சம் 10,000 ரிங்கிட் மலேசியா வரையிலும்  குறைந்த பட்சம் 10% சேமிப்பு இருப்பு தொகை அடிப்படையில் உதவி தொகையை வழங்கலாம் .நாம் சிந்தித்து பார்த்தோமேயானல் அப்படி சிறிய அளவு குறைந்தபட்ச உதவி தொகை

பெறுவது பின்காலத்தில் ஓய்வு பெற்ற நிலையில் பெரிய அளவில் இழப்பாகவும் தாக்கமாகவும் இருக்கது.உதாரணமாக பி40 வகை மற்றும் எம்40 வகை  மக்களுக்காக மாதவங்கி கடன்களை காலம் தாழ்த்தி திரும்ப செலுத்துவதற்கு (மொரிதொரியம்) ஏதுவாக இருக்கும் .முழுநேர மற்றும் பகுதி நேர பல்கலைக்கழக ,கல்லூரி மாணவர்களின்  2021-ஆம் ஆண்டுக்கான கல்விகடனை தள்ளுபடி அல்லது விலக்கு அளிக்க வேண்டும் . பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மறு தொழில் திட்டம் , பயிற்சி திட்டம் ,உதவிதொகை மானிய திட்டம் ஆகியவற்றை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31-ஆம் வரை தொடர்ந்து நீடிக்க வேண்டும் .புதிதாக வேலைகளை  உருவாக்குவதற்கும் பணியமர்த்துவதற்ககும் அரசு வழி வகுக்க வேண்டும் .அரசு தொழில் முனைவோருக்கு அந்தந்த துறைகளில் சிறப்பாக செயல்பட சிறப்பு மானியம் ,உதவிகளும் அரசு நிறுவனங்கள் ஏற்படுத்தி தரவேண்டும் .

       இதனால் பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு  பெரிய அளவில் ஆதரவாகவும் சுமைகுறைவாகவும் இருக்கும் .இவ்வாறான சலுகைகளைப் பெறும் போது தொழில்முனைவர்களுக்கு அரசு கூத்துக்களை பெற வாய்ப்புகளை உருவாக்கி தரமுடியும் .அது அரசாங்கத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையிலும் அவர்களின் தொடர்முயரற்ச்சிக்கு வெற்றிகரமாகவும் அமையும் . கூட்டாண்மை சமூக பொறுப்புகளுடன்(சிஎஸ்ஆர்)பல நிகழ்வுகளை ஏற்ப்பாடு செய்யவேண்டும் .இதனால் அதிகமான மக்கள் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள்.அரசாங்க நிறுவனங்கள் மற்றும் அரசாங்க தரகர்களும் வேலை வாய்ப்பு திட்டங்களை குறிப்பாக பி40 வகை மக்களுக்காக வழங்க வேண்டும் .

இந்த அனைத்து கருத்துக்களையும்  ஆலோசனைகளையும் தாம் நிதிஅமைச்சின் அதிகாரப்பூர்வ  அகப்பக்கத்திலும் மற்றும் இணைய முகப்பிலும் 2021-ஆம் ஆண்டிற்கான வரவு செலவு கணக்கறிக்கு முன்னதாகவே பதிவேற்றம் செய்துள்ளதாக அவர் கூறினார் .

      எனவே ! இந்த கோவிட்-19 தொற்று நோயல் பாதிப்படைய கூடிய குழுக்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக அரசாங்கம் முன்முயற்சிகளை ஆதரிக்க முன்வர வேண்டும் .அப்போதுதான் பொருளாதாரம் மீட்சிகானும். பல தனியார் துறை நிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனங்களும் நம் நாட்டில் முதலீடுகள் செய்ய முன்வருவார்கள்.அதன் அடிப்படையில் நாடு மீண்டும் பொருளாதாரத்தில் புத்துயிர் பெற்று பயணீட்டாளர்களை ஊக்குவித்து  தன்நம்பிக்கையோடு செலவு செய்ய உதவும் என்று அவர் கூறினார்.

இதனை அறிய மேல்  விவரங்களுக்கு :

திரு.மணிவண்ணன் ரத்திணம் .

அரிமா கூட்டரசு பிரதேச மாநில தலைவர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *